என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சைக்கிள் பயணம்"
- உங்களுக்கு பிடித்த இடத்தில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள்.
- நீங்கள் செல்லும் இடத்தின் சூழலையும் ரசிக்க பழகுங்கள்.
வாரத்தின் ஆறு நாட்களும் வேலையில் மூழ்கி சோர்ந்து போகும் நபரா நீங்கள்? அப்படியென்றால் கொஞ்சம் `ஓய்வு' எடுக்க பழகுங்கள். ஒரே வேலையில் ஈடுபட்டு வரும்போது, அந்த வேலை அப்படியே தடைபட்டு நின்று போக வாய்ப்புள்ளது. இது உங்கள் செயல்திறனை குறைப்பது மட்டுமின்றி, உங்களை அடுத்தகட்டத்துக்கு நகரவிடாமல் நீண்ட நாட்கள் அதே இடத்தில் முடக்கிவிடும். இதுபோன்ற பணிச்சூழலில் சிக்கியிருப்பவர்கள் அதில் இருந்து மீண்டுவர என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை பார்ப்போம்...
சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள்
தினமும் காலையில் உங்களுக்கு பிடித்த இடத்தில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றுவதாக அமையும். உங்கள் சைக்கிள் பயணங்களில், கவனம் சிதற வைக்கும் விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் பயணத்தையும், நீங்கள் செல்லும் இடத்தின் சூழலையும் ரசிக்க பழகுங்கள். இதனை ஒரு வேலையாக பார்க்காதீர்கள். குறிப்பாக அலைபேசி தொந்தரவுகள் இன்றி இதை செய்ய பழகுங்கள்.
10 ஆயிரம் காலடி நடைபயணம்
ஒரு நாளைக்கு நீங்கள் நடந்து செல்லும் தூரம் 10 ஆயிரம் காலடி (ஸ்டெப்ஸ்) என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ௧௦ ஆயிரம் ஸ்டெப்ஸ் என்பது 7.5 கிலோமீட்டர். அதற்காக ஒருவர் தினமும் 7.5 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும் என்பது இல்லை. உங்கள் வீட்டு மாடிக்கு ஏறுவது தொடங்கி, உங்கள் அலுவலகத்தில் காபி அருந்த கேண்டீனுக்கு செல்வது வரை அனைத்தையும் சேர்த்து இந்த அளவு நடந்தால் போதுமானதாக இருக்கும்.
தினசரி ஒரு புகைப்படம் எடுங்கள்
தினசரி உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை அல்லது உங்களுக்கு பார்க்க அழகாக தோன்றும் ஒரு விஷயத்தை புகைப்படமாக பதிவு செய்யுங்கள். இதேபோல் 30 நாட்களும் புகைப்படம் எடுங்கள். உங்கள் மனநிலை முதல் நாளில் இருந்து தற்போது எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களை புதுமையாக சிந்திக்க வைக்க இந்த பழக்கம் மிகவும் உதவியாக இருக்கும். அது மிகப்பெரிய போட்டோகிராபியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. செல்போன் புகைப்படமே போதுமானது.
தினமும் எழுதுங்கள்
தினமும் எழுதுங்கள் என்று கூறியவுடன் உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். `நான் ஒரு கணினி பொறியாளர்... நான் எப்படி தினமும் எழுதுவது?' என்று. ஒரு நாளைக்கு உங்கள் வாழ்வில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை அரைப்பக்க அளவில் இருந்து எழுத துவங்குங்கள். 100-வது நாள், 50 பக்க அளவு கொண்ட குறுநாவல் உங்கள் பெயரில் இடம் பெற்றிருக்கும். அத்துடன் புதுமையான விஷயங்களுக்கு நீங்கள் மாறிய விதம் புரியும்.
காதலிக்க பழகுங்கள்
காதல் என்றவுடன் எதிர்பாலின ஈர்ப்பு என்ற அர்த்தம் இல்லை. உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள். நீங்கள் செய்யும் சில ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். வேலை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலையை பற்றிய நினைவு இல்லாத உற்சாகமான விஷயங்களில் நாட்டம் செலுத்துங்கள்.
நண்பர்களுடன் சமூக வலை தளங்களில் உரையாடாமல் நேரில் உரையாட பழகுங்கள். மனதுக்கு நெருக்கமான நபருடன் அதிகமான நேரத்தை செலவிடுங்கள். இவற்றை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது, நீங்கள் நினைத்த புதுமை நபராக உங்களை நீங்களே தயார்படுத்தி இருப்பீர்கள்.
எதை செய்யக் கூடாது?
வேலையை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்.
அலுவலக நேரம் தவிர அதிக நேரம் அலுவலகத்தில் இருக்காதீர்கள்.
- ஆந்திரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், காஷ்மீர், பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களை சைக்கிளில் கடந்து, கேரளா செல்லும் வழியில் நேற்று ஓசூர் வந்தார்.
- அவருக்கு, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஓசூர்,
பொள்ளாச்சியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் முத்துசெல்வன்(26) எம்.பி.ஏ.பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
சைக்கிள் மூலம் 34,300 கிமீ தூரம் பயணித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக கடந்த 2021- ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கினார். ஆந்திரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம்,காஷ்மீர், பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களை சைக்கிளில் கடந்து, கேரளா செல்லும் வழியில் நேற்று ஓசூர் வந்தார். அவருக்கு, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின்னர், முத்துசெல்வன் கூறுகையில்:-
தான் இதுவரை 18,000 கிமீ தூரம் பயணித்திருப்பதாகவும், வருகிற 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் பயணத்தை முடிக்க உள்ளதாகவும் கூறினார்.
மேலும் அவர், கியர் இல்லாத சாதாரண சைக்கிளில் 120 கிலோ எடையிலான பொருட்களுடன் பயணிப்பதாகவும், தானே சமைத்து சாப்பிட்டு, பெட்ரோல் நிலையம், காவல்நிலையங்களில் இரவு நேரங்களில் தங்குவதாகவும் தெரிவித்தார்.
- 3,100 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் விருதுநகர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாதனை படைத்தார்.
- விருதுநகர் திரும்பிய அவருக்கு பல்வேறு தரப்பினர் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
விருதுநகர்
விருதுநகர் முத்து தெருவை சேர்ந்தவர் சண்முகமூர்த்தி-ருக்குமணி. இவர்களது மகன் வீரமணிகண்டன் (வயது 19). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டுபடித்து வரும் இவர், "தூய்மை இந்தியா" விழிப்புணர்வை வலியுறுத்தி காஷ்மீர் வரை சுமார் 3 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். பல்வேறு மாநிலங்களில் வீரமணிகண்டனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த 10-ந்தேதி சைக்கிள் பயணம் மேற்கொண்ட அவர் 21-ந்தேதி காஷ்மீரை சென்றடைந்தார். விருதுநகர் திரும்பிய அவருக்கு பல்வேறு தரப்பினர் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
- மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.
- 110 கிலோமீட்டர் தூரத்தை 11 மணி நேரத்தில் இடைவிடாது பயணம் செய்து உலக சாதனை படைத்தார்.
தாராபுரம்:
தாராபுரத்தில் சர்வதேச சைக்கிள் தினம் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழாவையொட்டி சாதாரண சைக்கிள் மூலம் இடைவிடாது பயணம் செய்து உலக சாதனை நிகழ்த்திய அரசு போக்குவரத்து கழக நடத்துனர் அறிவழகனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருபவர் அறிவழகன். இவர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார். புகலூர், அன்னூர், கருமத்தம்பட்டி, காரணம்பேட்டை, பல்லடம், பொங்கலூர், அவிநாசிபாளையம், கொடுவாய், வழியாக தாராபுரம் வந்தடைந்தார். தாராபுரம் வந்தடைந்த கருணாகரனுக்கு நகராட்சி அலுவலக வளாகத்தில் வைத்து நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ,நகரச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சாதாரண சைக்கிள் மூலம் 40 கிலோ எடையை சுமந்து கொண்டு 110 கிலோமீட்டர் தூரத்தை 11 மணி நேரத்தில் இடைவிடாது பயணம் செய்து உலக சாதனை படைத்தார்.அதனைத் தொடர்ந்து நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார். அவருக்கு சாதனை படைத்ததற்கான சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
சாதனை படைத்த அறிவழகன் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து விபத்துக்களை தவிர்ப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- புவி வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 4,200 கிலோமீட்டர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
- தமிழக அரசு இளைஞர்கள் சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப்படுத்த வேண்டும்.
கோவை,
பசுமையை பேணிக்காக்க வலியுறுத்தியும், புவி வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை இளைஞர் ஒருவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4,200 கிலோமீட்டர் விழிப்புணர்வு சாதனை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கோவை அடுத்த தொண்டாமுத்தூர் கலிக்க நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவசூரியன் செந்தில்ராமன் (28).
கெமிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் குஜராத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், அவர் இந்த மாதம் 3-ந் தேதி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சாதனை விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டார்.
அங்கிருந்து அவர் கடந்த 24 நாட்களாக பயணம் மேற்கொண்டு நேற்று முன்தினம் கோவை வந்தார்.
இன்று கோவை ராஜ வீதியில் அவருக்கு கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் கீதா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்த பயணம் குறித்து சிவசூரியன் செந்தில் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புவி வெப்பமயமாதலை தடுக்கவும், பசுமையை காக்க வலியுறுத்தியும் நான் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறேன். இதேபோல் கடந்த 2021-ம் ஆண்டு குஜராத்தில் இருந்து கோவைக்கு 1920 கிலோமீட்டர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு உள்ளேன்.
கடந்த ஆண்டு எனக்கு குருவாயூர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. அதற்காக கோவையிலிருந்து 150 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் குருவாயூர் சென்று திருமணம் செய்தேன். பசுமையை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு செய்கிறேன். பசுமை இந்தியா மற்றும் புவி வெப்பமயமாதலை தடுக்க தமிழக அரசு இளைஞர்கள் சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து வருகிற வெள்ளிக்கிழமை அவர் கோவையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி தனது விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தொடர உள்ளார்.
- கடந்த 1-ந்தேதி காஷ்மீரில் இருந்து புறப்பட்ட அவர் 3 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்தை 25 நாட்களில் கடந்து கன்னியாகுமரி வந்தார்.
- எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பணக்குடியை சேர்ந்த திருநங்கைகள் வினோதினி, முஜி, வாணி ஆகியோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
கன்னியாகுமரி:
மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் மிஸ்கான் ரகுவன்சி (வயது 22). கல்லூரி மாணவியான இவர் ஒரே பாரதம், உண்மையான பாரதம் மற்றும் பெண்கள் உரிமை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
கடந்த 1-ந்தேதி காஷ்மீரில் இருந்து புறப்பட்ட அவர் 3 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்தை 25 நாட்களில் கடந்து கன்னியாகுமரி வந்தார். பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பணக்குடியை சேர்ந்த திருநங்கைகள் வினோதினி, முஜி, வாணி ஆகியோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
சைக்கிள் பயண வீராங்கணை மிஸ்கான்ரகுவன்சி கூறுகையில், தான் தினமும் 100 முதல் 150 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டதாகவும், நாட்டில் பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்புக்கு கேள்விக்குறி எழுந்து உள்ளதால் அதனை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு முன்பு நர்மதை நதிக்கரையில் 3200 கிலோமீட்டர் தூரத்தை 19 நாட்களில் சைக்கிள் மூலம் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
- நெதர்லாந்தில் இன்று 25% ட்ரிப்புகள் சைக்கிளை பயன்படுத்தி தான் நடைபெறுகின்றன.
- நாடெங்கும் 32,000 கிமி நீளத்துக்கு சைக்கிள் பாதைகள் நிறுவப்பட்டன.
இரண்டாம் உலகப்போருக்கு பின் நெதர்லாந்தில் வளமை பெருகியது. வளமான தேசத்தில் மக்கள் செய்வதுபோல் டச்சுகாரர்கள் எல்லாம் பேருந்தை விட்டுவிட்டு கார்களை வாங்க ஆரம்பித்தார்கள். பெருமளவில் நெடுஞ்சாலைகள், லேன்கள், பாலங்களை கட்டும் அவசியம் ஏற்பட்டது.
இந்த சூழலில் கார் விபத்துக்கள் பெருக ஆரம்பித்தன. 1971ல் கார் விபத்தில் 400 குழந்தைகள் இறந்தார்கள். மொத்தமாக 3300 உயிர்கள் கார் விபத்துக்களில் பலியாகின.
தன் வீடு இருந்த தெருவில் மக்கள் நடமாட்டம் நின்று கார்கள் மட்டுமே செல்வதை பார்த்து மனம்நொந்தார் டச்சு எம்பி மார்ட்ஜே வான் புர்டன். அவர் தலைமையில் கார்களுக்கு எதிரான இயக்கம் துவங்கியது.
சும்மா "கார்கள் வேண்டாம்" என சொன்னால் மட்டும் போதாதே? அதனால் மாற்றாக சைக்கிளை தேர்ந்தெடுத்தார்கள். பேருந்து, மெட்ரோ ரெயில் எல்லாம் அரசின் முதலீட்டை நம்பியிருப்பவை. ஆனால் சைக்கிள் அப்படி அல்ல. சைக்கிள் பயணிகள் யூனியன்கள் துவங்கப்பட்டன. சாலைகளில் இரவில் பெயிண்ட்பாக்ஸை வைத்து இவர்களே சட்டவிரோதமாக சைக்கிள்களுக்கான லேன்களை வரைந்தார்கள்.
1973ல் பெட்ரோல் விலை அரபு-இஸ்ரேல் போர் காரணமாக உயர்ந்தது இவர்களுக்கு சாதகமானது. நெதர்லாந்து அரசின் மனம் மாறியது. நெதர்லாந்து நகர வடிவமைப்பு சைக்கிள்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டது. ஆஸ்ம்டர்டாம், ஹேக் உள்ளிட்ட பல நகரங்களில் சைக்கிள்கள் பெருக ஆரம்பித்தன.
இன்று நெதர்லாந்தில் 25% ட்ரிப்புகள் சைக்கிளை பயன்படுத்தி தான் நடைபெறுகின்றன. நாடெங்கும் 32,000 கிமி நீளத்துக்கு சைக்கிள் பாதைகள் நிறுவப்பட்டன. சைக்கிள் உடல்பயிற்சிக்கான கருவி அல்ல, அன்றாட பயணத்துக்கான வாகனம் என்பதை வலியுறுத்தும் வண்ணம் ஸ்பெஷலாக ஒமிபியாட் எனும் வகை சைக்கிள் உருவாக்கப்பட்டது.
சைக்கிள்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்வகையில் கார்களின் ஸ்பீட்லிமிட் மணிக்கு 30 கிமிதான் என சட்டம் இயற்றப்பட்டது. ஏன் என்றால் 30 கிமிக்கு மேம்பட்ட வேகத்தில் கார் சைக்கிள் மேல் மோதினால் சைக்கிள்பயணி இறந்துவிடுவார். அதனால் அனைத்து நகரங்களிலும் 30 கிமிதான் ஸ்பீட் லிமிட் இன்று நாட்டில் 1.7 கோடி மக்கள் இருக்கிறார்கள். 2.2 கோடி சைக்கிள்கள் உள்ளன.
ஆபிசுக்கு, பள்ளிக்கு, ஷாப்பிங்குக்கு என எங்கும் மக்கள் சைக்கிளில் போவார்கள். சிறுவயது குழந்தைகள் தனியாக அல்லது குழுவாக சைக்கிளை ஓட்டிக்கொண்டு நண்பர்கள் வீடு, பள்ளி, விளையாட என செல்வதை காணலாம்.
அங்கு மக்கள் ஜாலியாக சைக்கிள்களில் செல்வதையும், பொருட்களை கொண்டு செல்வதையும் பார்க்கலாம். கோட், சூட் எல்லாம் போட்டு சைக்கிள் ஓட்டிக்கொன்டு ஆபிஸ் போவார்கள்.
இம்மாதிரி நம் பெருநகரங்களையும் கார்களுக்கானவையாக மாற்றாமல், சைக்கிள்களுக்கானவையாக மாற்றினால் இடநெருக்கடி, மேம்பாலம் கட்ட செலவு, சுற்றுசூழல் என பலவிதமான மாற்றங்கள் வரும்.
நடக்குமா?
-நியாண்டர் செல்வன்
- ‘பிளாஸ்டிக் மறுசுழற்சியை’ வலியுறுத்தி, இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
- ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது.
திருவள்ளூர்:
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் குர்ரம் சைதன்யா (22). இவர் பிளாஸ்டிக் மறுசுழற்சி மூலம் பசுமை இந்தியாவை உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து இந்தியா முழுவதும் 50 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இவர் ஆந்திரா மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந்தேதி தொடங்கி கர்நாடக மாநிலம், தமிழகம் வழியாக 3600 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று வந்தார். அவருக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக குர்ரம் சைதன்யா கூறியதாவது:-
'மரம் நடுதலை' வலியுறுத்தி, கடந்த ஆண்டு மே முதல் ஜூன் வரை நெல்லூர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். மேலும், அதே ஆண்டில், 'உணவை வீணாக்கக் கூடாது' என்பதை வலியுறுத்தி, நெல்லூரில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன்.
தற்போது, 'பிளாஸ்டிக் மறுசுழற்சியை' வலியுறுத்தி, இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது.
அதன் புழக்கம் தவிர்க்க முடியாமல் உள்ள நிலையில் அதை மறுசுழற்சி மூலம் மாசை கட்டுப்படுத்த முடியும். இதை மையமாகக் கொண்டு சைக்கிள் பயணத்தை தொடங்கி உள்ளேன்.
625 நாட்கள் நடைபெறும் இந்த சைக்கிள் பயணத்தில், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 30 மாநிலங்களில் உள்ள 700 மாவட்டங்களில் 50 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
நெல்லூர் சீமப்பொறி மருத்துவமனை அருகே பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இளைய சமுதாயம் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
- நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கி.மீ. என சைக்கிள் ஓட்டிய மகேஷ், ஜம்மு காஷ்மீரை வெற்றிகரமாக அடைந்தார்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் கணியாகுளம் பாறையடி ஊரைச் சேர்ந்தவர் மகேஷ் (54). ஒரு காலை இழந்த மாற்றத்திறனாளியான இவர், இன்றைய இளைய சமுதாயம் தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியுடன் செயல்பட்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து, சைக்கிள் பயணத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கி.மீ. என சைக்கிள் ஓட்டிய மகேஷ், ஜம்மு காஷ்மீரை வெற்றிகரமாக அடைந்தார். பின்னர் அங்கிருந்து ரெயில் மூலம் ஊர் திரும்பினார். அவரை நாகர்கோவில் மாநராட்சி மேயர் மகேஷ் வரவேற்று வாழ்த்தினார்.
- கேரளா மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தூய்மை பாரதத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்.
- இவர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 90 முதல் 140 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கன்னியாகுமரி:
கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் உன்னி (வயது 58). ஆடிட்டர். இவர் சீடு குருகுலம் சார்பில் தூய்மை பாரதத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி அவர் கன்னியாகுமரி விவே கானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சி கூடத்தில் இருந்து தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.
அங்கு உள்ள பாரத மாதா சிலைக்கு மலர் தூவி வணங்கினார். அதைத் தொடர்ந்து ராமர் லட்சுமணர் சீதை சிலைகளுக்கு மலர் தூவி வணங்கினார். பின்னர் சித்திரக் கண்காட்சி கூடம் முன்பு உள்ள 27 அடி உயர ஆஞ்சநேயர் சிலையின் கால் பாதத்தில் மலர் தூவி வணங்கினார்.
அதைத் தொடர்ந்து சைக்கிள் பயணத்தை கன்னியா குமரி விவே கானந்த கேந்திர தலை வர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி விவே கானந்த கேந்திர மக்கள் தொடர்பு அதிகாரி ரகுநாதன் நாயர், கேந்திர பொறுப்பாளர் சுனில் ராமுலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரியில் இருந்து சைக்கிள் பயணம் புறப்பட்ட கோவிந்தன் உன்னி தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலை அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி சென்றடைகிறார். மொத்தமுள்ள 5 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்தை இவர் 48 நாட்களில் சைக்கி ளில் கடந்து செல்கிறார்.
இவர் நாள்ஒன்றுக்கு சராசரியாக 90 முதல் 140 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2017- ம் ஆண்டு சபரி மலைக்கு பிளாஸ்டிக் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கன்னியாகுமரி, சென்னை வழியாக மீண்டும் பாலக்காடு சென்றடையும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
அப்போது இவர் மொத்தம் உள்ள 1860 கிலோ மீட்டர் தூரத்தை 28 நாட்களில் சைக்கிளில் கடந்து சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவர் இந்த முறை சைக்கிள் பயணம் மேற்கொள்வதற்காக பொது மக்களிடம் இருந்து தலா ஒரு ரூபாய் வீதம் மொத்தம் ரூ 22 ஆயிரம் வசூல் செய்து சைக்கிள் விலைக்கு வாங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்